இன்று முதல் 50 இடங்கள் லாக்: திருச்சி மாவட்ட கலெக்டர் அதிரடி

இன்று முதல் 50 இடங்கள் லாக்: திருச்சி மாவட்ட கலெக்டர் அதிரடி

டெல்லி மாநாட்டுக்கு சென்று திரும்பியவர்கள் 17 பேர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதை அடுத்து திருச்சியில் இன்று முதல் 50 இடங்கள் மொத்தமாக லாக் செய்யப்படுவதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு அவர்கள் தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது இன்று முதல் 50 இடங்கள் முழுமையாக அடைக்கப்படும் என்று கூறினார்

மேலும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 120 பேர் டெல்லிக்கு சென்று அவர்களில் 117 பேர் திரும்பியதாகவும் திரும்பியவர்கள் 53 பேருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டதில் 17 பேர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் மீதி 36 பேர்களுக்கு தொற்று இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்

மேலும் கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மொத்தம் 50 இடங்களில் இருந்ததாகவும் அந்த பகுதி முழுவதுமே அடைக்கப்படும் என்று அந்த பகுதியில் இருந்து யாரும் வெளியேற முடியாது அந்த பகுதிக்கு புதிதாக யாரும் உள்ளே நுழைய முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published.