shadow

தனுஷின் தமிழ் படத்தில் முழுக்க முழுக்க இங்கிலீஷ் பேசும் கஜோல்

தனுஷ் நடித்து முடித்துள்ள ‘விஐபி 2’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள பாலிவுட் நடிகை கஜோல், இந்த படத்தில் கிட்டத்தட்ட படம் முழுவதும் ஆங்கில வசனம்தான் பேசுவதாக அமைக்கப்பட்டுள்ளதாம். அவருடைய கேரக்டரின் தன்மை அதுதான் என்பதால் இயல்பாக அமைந்துவிட்டதாகவும், எனவே படப்பிடிப்பின்போது தமிழில் வசனம் பேசி நடிக்க வேண்டுமே என்ற பயம் தன்னிடம் இல்லாமல் இருந்ததாகவும் நடிகை கஜோல் கூறியுள்ளார்.

இந்த படத்தில் கஜோல் நெகட்டிவ் வேடத்தில் நடித்திருப்பதாகவும், அதே நேரத்தில் அவருக்கு ரிச் கேரக்டர் என்பதால் படத்தில் அவருக்கு 50%க்கு மேல் ஆங்கில வசனம் தான் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர். ஒருசில காட்சிகளில் மட்டும் தமிழில் பேசி நடித்திருக்கும் கஜோலுக்கு இயக்குனர் செளந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் உதவி செய்ததாகவும் கூறப்படுகிறது.

தனுஷ், அமலாபால், கஜோல், விவேக், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு சீன் ரோல்டான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply