shadow

50 நிமிடங்கள் அட்டகாசம் செய்யும் மெர்சல் விஜய்

இளையதளபதி விஜய் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ள ‘மெர்சல்’ திரைப்படம் வரும் தீபாவளி தினமான அக்டோபர் 18ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் பஞ்சாயத்து தலைவர் கேரக்டர் குறித்து இயக்குனர் அட்லி சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பஞ்சாயத்து தலைவர் கேரக்டரின் பெயரே தளபதி என்றும், இந்த கேரக்டரின் காட்சிகள் படத்தில் சுமார் 50 நிமிடங்கள் இருக்கும் என்றும், இந்த 50 நிமிடங்களிலும் விஜய் அட்டகாசம் செய்திருப்பார் என்றும் விஜய் ரசிகர்களுக்கு வேற லெவல் சந்தோஷத்தை இந்த கேரக்டர் கொடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்

அட்லி கூறியதை பார்க்கும்போது இந்த கேரக்டர் படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அட்லி கூறியது எந்த அளவுக்கு உண்மை என்பதை வரும் தீபாவளி அன்று திரையில் பார்த்து தெரிந்து கொள்வோம்

Leave a Reply