50% கொடுங்க, விபிஎப் கட்டணத்தை ஏற்று கொள்கிறோம்: திரையரங்கு உரிமையாளர்கள்

தயாரிப்பாளர்களின் கோரிக்கையின்படி விபிஎப் கட்டணத்தை நாங்கள் ஏற்று கொள்கிறோம், ஆனால் பட வசூலில் 50 சதவிகிதம் திரையரங்கு உரிமையாளர்களுக்கு தயாரிப்பாளர்கள் பங்கு தர வேண்டும் என்ற நிபந்தனையை திரையரங்கு உரிமையாளர்கள் முன் வைத்துள்ளனர்.

இந்த நிபந்தனை சாத்தியமில்லாதது என்பதால் தயாரிப்பாளர்கள் இதற்கு கண்டிப்பாக ஒப்புக்கொள்ள மாட்டார்கள். எனவே தயாரிப்பாளர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் இடையிலான பிரச்சனை இப்போதைக்கு முடிவுக்கு வராது என்றே தோன்றுகிறது

இந்த நிலையில் தமிழக அரசு வரும் 16ம் தேதி முதல் தமிழகத்தில் திரையரங்குகள் திறக்க அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply