50வது நாளை காணும் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆன படங்கள்
கோலிவுட் திரையுலகில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் வெளியாகி வந்தாலும் அதில் உண்மையான வெற்றி பெறும் படங்கள் விரல்விட்டு எண்ணும் வகையில் தான் கடந்த சில ஆண்டுகளாக இருந்து வருகிறது.
ஆனால் இந்த வருடம் அடுத்தடுத்து பல வெற்றிப்படங்கள் வெளியாகியுள்ளதால் திரையுலகினர்களும் ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். குறிப்பாக ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆன இரண்டு படங்கள் தற்போது 50வது நாள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளது.
ஆம், கடந்த அக்டோபர் 4ஆம் தேதி வெளியான விஜய்சேதுபதி, த்ரிஷாவின் ’96’ திரைப்படம் நேற்றும், அக்டோபர் 5ஆம் தேதி வெளியான விஷ்ணுவிஷால், அமலாபால் நடித்த ‘ராட்சசன்’ திரைப்படம் இன்றும் 50வது நாளை எட்டியுள்ளது. இந்த இரண்டு படங்களும் போலியான வசூல் தகவல்கள் இன்றி உண்மையாகவே ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்ற படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு படக்குழுவினர்களுக்கும் நமது வாழ்த்துக்கள்