5 மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார்? மாபெரும் கருத்துக்கணிப்பு முடிவுகள்

5 மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார்? மாபெரும் கருத்துக்கணிப்பு முடிவுகள்
election
தமிழகம் உள்பட ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் ஐந்து மாநிலங்களிலும் ஆட்சியை பிடிப்பது யார்? என்பது குறித்து கருத்துக்கணிப்பு ஒன்றை  சி.ஓட்டர்ஸ் என்ற தனியார் நிறுவனம் எடுத்து அதன் முடிவை வெளியிட்டுள்ளது.

இந்த கருத்துக்கணிப்பில் தமிழகத்தை பொறுத்தவரை மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை பிடிப்பார் என்றும் ஆனால் கடந்த முறை போல பெரும் மெஜாரிட்டியுடன் இல்லாமல் பார்டர் மெஜாரிட்டியில் ஆட்சியை பிடிப்பார் என்றும் கூறியுள்ளது. அதாவது அ.தி.மு.க. 116 தொகுதிகளிலும், தி.மு.க. 101 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என அந்த கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. சதவிகித வீதத்தில் பார்த்தால் அ.தி.மு.க.வுக்கு 41.1 சதவீத வாக்குகளும், தி.மு.க கூட்டணிக்கு 39.5 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என அந்த கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.

அதேபோல் மேற்குவங்கத்திலும் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்றும் அந்த கட்சி 156 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் அந்த கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.

அஸ்ஸாமில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்காது என்றும் அந்த மாநிலத்தை பாஜக கைப்பற்றுவதாகவும், கேரளாவில் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியை பிடிக்கும் என்றும் அந்த கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.

Leave a Reply