போலீசை தாக்கிய 10 பேர்களில் 5 பேர்களுக்கு கொரோனா!

அதிர்ச்சியில் பொதுமக்கள்

குஜராத் மாநிலத்தில் போலீஸார் தாக்கியதாகக் கைது செய்யப்பட்ட 10 பேர்க்ளில் 5 பேர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளதால் போலீசார் மற்றும் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

கடந்த திங்கட்கிழமை அன்று குஜராத் மாநிலத்தில் உள்ள வதேரா என்ற பகுதியில் 10 பேர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு கோரிக்கைகளை வைத்து இவர்கள் செய்த போராட்டத்தின் காரணமாக அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்

இந்த நிலையில் பத்து பேர்களுக்கும் கொரோனா அறிகுறி இருந்ததை அடுத்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது 10 பேர்களில் 5 பேர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது
இதனையடுத்து உடனடியாக அந்த 10 பேர்களுடன் தொடர்பில் இருந்த நான்கு போலீஸ்காரர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது

Leave a Reply