shadow

8

சென்னையில் தேர்தல் முடிந்த பிறகு திறப்பதற்கு தயாராக ஐந்து இடங்களில் எஸ்கலேட்டர் என்ற நகரும் படிக்கட்டுக்கள் காத்திருக்கின்றன.

தமிழக அரசு கடந்த 2012ஆம் ஆண்டு சென்னையின் மிக நெருக்கடியான ஐந்து இடங்களில் எஸ்கலேட்டர் என்ற நகரும் படிக்கட்டுக்கள் பொதுமக்களின் பயன்கருதி அமைக்க முடிவு செய்தது. குரோம்பேட்டை மருத்துவமனை அருகில் உள்ள ஜிஎஸ்டி சாலை, தாம்பரம் MEPZ, திருமங்கலம் SBOA பள்ளி, டிசிஎஸ் அருகே உள்ள தரமணி ஜங்ஷன், மற்றும் தரமணி ஜங்ஷன் அருகேயுள்ள பெருங்குடி சாலை ஆகிய ஐந்து இடங்களில் நகரும் படிக்கட்டுக்கள் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டன.

மேற்கண்ட இடங்களில் எஸ்கலேட்டர் அமைக்கும் பணிகள் முற்றிலும் முடிவடைந்துவிட்டதாகவும், தேர்தல் முடிந்தபிறகு அவை மக்களின் பயன்பாடுக்கு திறந்துவிடப்படும் என்று தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்

Leave a Reply