சென்னையில் நேற்றைய புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்தில் ஐந்து பேர் வரை பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

சர்தார் வல்லாபாய் பட்டேல் சாலையில் 19 வயது பொறியியல் கல்லூரி மாணவன் ராம்பிரசாத், செவ்வாய் இரவில் புத்தண்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வீடு திரும்பியபோது லாரி மோதி பரிதாபமாக பலியானார்.

அதுபோலவே ராமநாராயணன் என்ற 42 வயது நபர், எம்.கே.பி நகரில் ஓட்டல் ஒன்றில் வேலை செய்கிறார். இவர் வேலையை முடித்துவிட்டு இரவில் ஸ்கூட்டரில் சென்றபோது பேசின் பிரிட்ஜ் அருகில் லாரி மோதி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே பலியானார்.

மேலும் அருண்குமார் என்ற 17 வயது மாணவன் குன்றத்தூர் சாலையில் தமது நண்பர்களுடன் பைக்கில் புத்தாண்டு கொண்டாட கேக் வாங்கிக்கொண்டு திரும்பும் வழியில் நிலைதடுமாறி கீழே விழுந்து பலியானார். அதேபோல் அன்புச்செழியன் என்பவர் வேலப்பன் சாவடி என்ற இடத்தில் லாரி மோதி பலியானார்.

அதிகாலை 4.30 மணியளவில் தண்டாயுதபாணி என்ற 23 வயது வலிபர் புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துவிட்டு பைக்கில் வீடு திரும்பியபோது தாம்பரம் பைபாஸ் சாலையில் கீழே விழுந்து பலியானார். அவருடன் சென்ற நண்பர்கள் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருக்கின்றனர்.

நேற்று ஒரே நாளில் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் நடந்த சாலைவிபத்துகளில் 69 பேர் காயம் அடைந்ததாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 50 பேர்களும், ஸ்டான்லி மருத்துவமனையில் 25 பேர்களும் சாலைவிபத்து காயங்களுக்காக சிகிச்சைக்காக வந்துள்ளனர். இவர்களில் 90% பேர்கள் 20 முதல் 25 வயதுக்குட்பட்டவர்களே என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply