வெற்றி பெற்ற 5 சுயேட்சைகள் திமுகவுக்கு ஆதரவு: திமுக வசமாகிய மேலும் ஒரு நகராட்சி!

ஏற்கனவே 90 சதவீத நகராட்சிகள் திமுக வசமாகியுள்ள நிலையில் தற்போது வெற்றி பெற்ற ஐந்து சுயேச்சை வேட்பாளர்கள் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் மேலும் ஒரு நகராட்சி திமுக வசம் ஆகி உள்ளது

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சியில் சுயேச்சையாக வெற்றி பெற்ற 5 வேட்பாளர்கள் நேற்று அமைச்சர் கே என் நேரு மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோரை சந்தித்து திமுகவுக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர்

இதனால் மணப்பாறை நகராட்சி திமுக வசம் ஆகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது