shadow

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் சற்று முன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது

தமிழகத்திலுள்ள தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக இந்த ஐந்து மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்றும் எனவே இந்த மாவட்டங்களில் உள்ளவர்கள் முன் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

மேலும் தமிழகம் மற்றும் புதுவையில் சில இடங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையை பொருத்தவரை வெப்பம் அதிகமாக இருக்கும் என்றும் மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் வெளிவந்துள்ளன

5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை, கனமழை, சென்னை வானிலை ஆய்வு மையம்,