5 காவல் துணைஆணையர்கள், 5 ஆயிரம் காவலர்கள் குவிப்பு: தலைமைச்செயலகத்தில் பரபரப்பு

5 காவல் துணைஆணையர்கள், 5 ஆயிரம் காவலர்கள் குவிப்பு: தலைமைச்செயலகத்தில் பரபரப்பு

சென்னை வண்ணாரப்பேட்டையில் சிஏஏ சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 6 நாட்களாக இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இன்று தலைமைச் செயலகத்தை முற்றுகையிட போவதாக அறிவித்துள்ளனர்

இதனை அடுத்து தலைமைச் செயலகத்தில் 5 காவல் ஆணையர் தலைமையில் 550 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

அதுமட்டுமின்றி போராட்டம் நடைபெற உள்ள சேப்பாக்கத்தில் 5000 காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இந்த போராட்டத்தின்போது எந்தவிதமான அசம்பாவிதம் ஏற்படக்கூடாது என்பதற்காக போலீசார் மிகவும் விழிப்புடன் இருப்பதாகவும் தடையை மீறி தலைமைச் செயலகத்தின் முன் முற்றுகைப் போராட்டம் நடத்துபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது இந்த போராட்டம் காரணமாக சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published.