5க்கும் மேற்பட்டோருக்கு வேலை வழங்கும் இளைஞருக்கு சிறப்பு நிதி: கமல் அறிவிப்பு

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் இன்று முதல் மீண்டும் தேர்தல் பிரச்சாரம் செய்யவிருக்கும் நிலையில் தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் செய்யவுள்ள திட்டங்கள் குறித்து அறிவித்துள்ளார். அவற்றில் சில முக்கியமானவை:

ஆரோக்கியமான தமிழகம் என்ற இயக்கத்தை பள்ளி, கல்லூரிகளில் தோற்றுவிக்கும்.

ஒவ்வொரு பஞ்சாயத்திலும் விளையாட்டு மையங்கள் தோற்றுவிக்கப்படும்.

விளையாட்டு மேம்பாட்டுக்கான 7 செயல் திட்டங்களை வைத்துள்ளோம்.

பெண்கள் வாழ்க்கை தரம் மேம்பட பல்வேறு திட்டங்கள் உள்ளன.

இலவச ஆரோக்கியம், கருத்தரிப்பு பரிசோதனை மையங்கள் அமைக்கப்படும்.

ஒரு இளைஞர் 5க்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு வழங்கினால், அவருக்கு சிறப்பு நிதி வழங்கப்படும்

 

Leave a Reply