49 பேர்கள் மீது தேசத்துரோக வழக்கு சரிதானா? ஒரு அலசல்

இந்தியாவில் சிறுபான்மையினர் பசுவின் பெயரால் தாக்கப்படுவதாகவும் மதரீதியிலான வன்முறை அதிகரித்திருப்பதாகவும், அதனால் நடவடிக்கை எடுக்கும்படியும் மணிரத்னம் உள்பட 49 பேர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர். இந்த கடிதம் பத்திரிகைகளுக்கும் பகிரப்பட்டதால் செய்தி உலகம் முழுவதும் வெளியானது

இந்த நிலையில் பிரதமருக்கு கடிதம் எழுதி கையெழுத்திட்ட 49 பேர் மீதும் தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது

இந்த நிலையில் பிரதமருக்கு உண்மையை சொல்லி லட்டர் எழுதியதற்கு தேசத்துரோக வழக்கா? இது என்ன ஜனநாயகமா? இல்லை சர்வாதிகாரி ஆட்சியா? என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் சிறுபான்மையினர்களுக்கு ஆபத்து என்றால் உடனே கடிதம் எழுதிய இந்த 49 பேர் கோவை வெடிகுண்டு, பாராளுமன்ற தாக்குதல், மும்பை தொடர் வெடிகுண்டு சம்பவத்தின்போது அமைதியாக இருந்தது ஏன்?

அப்படி என்றால் இந்த 49 பேர்களின் உண்மையான நோக்கம் என்ன? இந்தியாவில் சிறுபான்மைக்கு எதிராக ஒரு பெரிய வன்முறை நடக்கின்றது என்பதை உலகிற்கே சொல்ல வேண்டும், இந்தியாவிற்கு உலக அளவில் ஒரு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கமா? என்ற கேள்வியையும் நடுநிலையாளர்கள் எழுப்பி வருகின்றனர்.

மேலும் இப்படி ஒரு வழக்கை பதிவு செய்ய அனுமதி அளித்தது நீதிமன்றம். எதிர்க்கட்சிகள் நீதிமன்றத்தின் முடிவைத்தான் சர்வாதிகாரம் என விமர்சனம் செய்கிறதா?

Leave a Reply