500ஐ நெருங்குகிறது கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை: இத்தாலி போல் ஆகுமா இந்தியா?

500ஐ நெருங்குகிறது கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை: இத்தாலி போல் ஆகுமா இந்தியா?

உலகமெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் மிக வேகமாக பரவி வரும் நிலையில் நேற்று இரவு நிலவரப்படி இந்தியாவில் 476 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஆயிரக்கணக்கானோர் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கொரோனா வைரசால் நேற்றும் ஒருவர் பலியாகி உள்ளார். இதனை அடுத்து இந்தியாவில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இந்திய அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும், பொதுமக்களும் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் இல்லையேல் இந்தியா, இன்னொரு இத்தாலியாக மாறும் அபாயம் இருப்பதாகவும் நெட்டிசன்கள் எச்சரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.