மும்பையின் வாக்காளர் பட்டியலை நேற்று தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதில் அமிதாப்பச்சன் பெயரில் 450 வாக்காளர்களும், ரோபோ பெயரில் 500 வாக்காளர்களும் ஷாருக்கான் பெயரில் 30 வாக்காளர்களும் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமிதாப்பச்சன் பெயரில் உள்ள 450 வாக்காளர்களில் பெரும்பாலானோர் 20 முதல் 30 வயதுடையவர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமிதாப் நடித்த ஷோலே திரைப்படம் ரிலீசான காலகட்டத்தில் அமிதாப்பின் பெயர் மும்பையின் பல இடங்களிலும் புகழ்பெற்று விளங்கியது. அந்த காலகட்டத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு அமிதாப் பச்சன் என்றே பெயர் வைத்துள்ளனர். அந்த குழந்தைகள்தான் தற்போது பெரியவர்களாக ஆகி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
மேலும் கப்பார் சிங் பெயரிலும், அம்ரீஷ்புரி,சல்மான்கான் போன்ற பாலிவுட் பிரபலங்கள் பெயர்களிலும் பல வாக்காளர்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. ரஜினிகாந்த் நடித்த ரோபோ பெயரில் 500 வாக்காளர்கள் இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.