shadow

45 நாட்களில் முடிந்த ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ திரைப்படம்

ஒரு திரைப்படம் எந்த அளவுக்கு விரைவாக முடிக்கப்படுகிறதோ, அந்த அளவுக்கு அந்த படத்தின் தயாரிப்பாளர் லாபம் பெறுவார் என்பது திரையுலகின் கணக்கு. பிரபல இயக்குனர் ராமநாராயணன் ஒரு திரைப்படத்தை முடிக்க அதிகபட்சம் 30 நாட்கள் மட்டுமே எடுத்து கொள்வார். எனவே அவர் இயக்கிய பெரும்பாலான படங்கள் லாபத்தை கொடுத்தன.

ஆனால் தற்போது பிரமாண்டம் என்ற பெயரில் வருடக்கணக்கில் ஒரு படத்தை ஒருசில இயக்குனர்கள் எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் யூடியூப்பில் புகழ் பெற்றவர்கள் நடித்து வரும் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ படத்தை 45 நாட்களில் முடித்திருக்கிறார்கள்.

இந்த படத்தை 60 நாட்களில் முடிக்க திட்டமிட்டதாகவும், ஆனால் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கொடுத்த ஒத்துழைப்பால் வெறும் 45 நாட்களில் இந்த படம் முடிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது

இப்படத்தை, அறிமுக இயக்குநர் – ‘எருமசாணி’ புகழ் ரமேஷ் வெங்கட் இயக்கி இருக்கிறார். ‘மெட்ராஸ் சென்ட்ரல்’ புகழ் கோபி – சுதாகர், ‘எரும சாணி’ புகழ் விஜய் – ஹரிஜா, ‘புட் சட்னி’ புகழ் அகஸ்டின், ‘டெம்பில் மங்கிஸ்’ புகழ் ஷா ரா – அப்துல் மற்றும் விஜே ஆஷிக் ஆகியோர் மிக முக்கிய கதாபத்திரங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply