அமெரிக்காவில் மெரிலாண்ட் என்ற பகுதியை சேர்ந்த Alicia Denice Brown என்ற 24 வயது பெண், தனது 4 மாத குழந்தையை காருக்குள் வைத்து பூட்டிவிட்டு, எட்டுமணி நேரம் தொடர்ந்து சூதாட்ட கிளப் ஒன்றில் சூதாடிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். இவர் நேற்று புத்தாண்டு தினத்தில் மேரிலாண்ட் பகுதியில் உள்ள ஒரு சூதாட்ட விடுதிக்கு தனது காரில் வந்தார். குழந்தை காருக்குள் தூங்கியதால் காரிலேயே வைத்து பூட்டிவிட்டு, சூதாட்ட விடுதிற்குள் சென்று தொடர்ந்து 8 மணிநேரம் சூதாட்டம் விளையாடியுள்ளார்.

இதனிடையே சூதாட்ட கிளப்பின் காவலர் காருக்குள் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டு திடுக்கிட்டபடியே காரின் கதவை உடைத்து பார்த்த போது பச்சிளங்குழந்தை ஒன்று பசியாலும், குளிரினாலும் துடித்துக்கொண்டிருந்ததை பார்த்தார். உடனடியாக ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டு குழந்தை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

எட்டுமணிநேரம் கழித்து வந்த Alicia Denice Brown, காரில் தன்னுடைய குழந்தை காணாமல் போனதை கண்டு திடுக்கிட்டார். இதனிடையே சிசிடிவி கேமராவில் பார்த்து அந்த பெண்ணை தேடிக்கொண்டிருந்த போலீஸார் அங்கு வந்து அவரை கைது செய்தனர். குழந்தையை அஜாக்கிரதையாக காரில் பூட்டிவிட்டு சென்ற அலிசிய டினீஸ் ப்ரௌந் என்ற பெண்ணுக்கு நீதிமன்றம் 50ஆயிரம் டாலர் அபராதம் விதித்தது. குழந்தை சிகிச்சைக்கு பின்னர் நலமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply