shadow

4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் வங்கி கணக்கு முடக்கமா?

பாரத ஸ்டேட் வங்கி கணக்கின் குறைந்தபட்ச இருப்பு தொகை சமீபத்தில் உயர்த்தப்பட்டதால் அதன் வாடிக்கையாளர்கள் பலரும் சிரமத்துக்கு ஆளாகிய நிலையில் தற்போது அந்த வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு மேலும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன்படி சமீபத்தில் அறிமுகம் செய்யப்பபட்ட அடிப்படை வங்கி கணக்குகளுக்கு ரிசர்வ் வங்கி ஒரு புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

ஜன்தன் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வங்கி கணக்குகளில் இருந்து 4 முறைக்கு மேல் எந்த வடிவில் பணம் எடுத்தாலும் அந்த கணக்கு அம்மாதம் முடியும் வரை முடக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி ஒருசில வங்கிகள், அந்த கணக்குகளை சாதாரண வங்கி கணக்காக மாற்றி, அதற்கான அபராத தொகையையும் வசூலிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply