4 ஹீரோ, 3 ஹீரோயின்கள் நடித்த ‘பார்ட்டி’ படத்தின் சென்சார் தகவல்
ஜெய், ஷ்யாம், சந்திரன், சிவா, ஆகிய ஹீரோக்களும், ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பேத்ராஜ் ஆகிய மூன்று ஹீரோயின்களும் நடித்த ‘பார்ட்டி’ திரைப்படத்தின் சென்சார் பணிகள் நேற்று முடிந்துள்ளன.
இந்த படத்தை நேற்று மாலை பார்த்த சென்சார் அதிகாரிகள், படத்திற்கு ‘யூஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். இந்த தகவலை இயக்குனர் வெங்கட்பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் ‘பார்ட்டி’ படத்தின் ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.
காமெடி மற்றும் கிளாமர் கலந்த இந்த படத்தின் முக்கிய வேடங்களில் சத்யராஜ், நாசர், ஜெயராமன் ஆகியோர் நடித்துள்ளனர். பிரேம்ஜி அமரன் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரித்துள்ளார்.