4 நாள் வேலை, 3 நாள் வேலை: பிரபல நிறுவனம் அதிரடி

4 நாள் வேலை, 3 நாள் வேலை: பிரபல நிறுவனம் அதிரடி

முன்னணி ஐடி நிறுவனங்கள் அனைத்திலும் வாரத்தில் 5 நாள் வேலை, 2 நாள் விடுமுறை என இருந்த நிலையில் தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு வாரத்தில் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுமுறை என புதிய முறையை அமல்படுத்தவுள்ளது

மேலும் ஊழியர்கள் தங்களது வேலை நேரத்தை தாங்களே நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்றும் மைக்ரோசாப்ட் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம்தான் மைக்ரோசாஃப்ட் தனது நிறுவனத்தின் குறிப்பிட்ட ஒரு குழுவைச் சேர்ந்த 2,300 பணியாளர்களுக்கு வாரம் மூன்று நாட்கள் விடுமுறை என்பதை அமல்படுத்தியபோது, இதனால் பணியின் தரம் 40 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் எனவே இதனை அனைத்து ஊழியர்களுக்கும் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. மேலும் கூடுதலான ஒருநாள் விடுமுறைக்கும் ஊதியம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.