4 கோடிக்கும் மேல் வரதட்சணை: சென்னை பெண் டாக்டரின் திருமணம் திடீர் நிறுத்தம்!


சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவருக்கும், வருமான வரித்துறை அதிகாரி ஒருவருக்கும் நடக்கவிருந்த திருமணம் வரதட்சணையால் திடீரென நிறுத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவரின் திருமணத்திற்காக 5 லட்சம் ரூபாய் ரொக்கம், 10 லட்ச ரூபாய் மதிப்பில் சொகுசு கார், மூன்றரை கோடி மதிப்பில் பங்களா என சுமார் 4 கோடிக்கும் மேல் வரதட்சணை கொடுத்து வருமானவரித் துறையில் பணிபுரியும் ஒருவருக்கு திருமணம் நடத்த பேசி முடித்தனர். இந்த திருமணத்துக்காக மண்டபம் ஏற்பாடு செய்து, பத்திரிகைகள் கொடுக்கப்பட்டு, அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் தற்போது திடீரென திருமணம் நிறுத்தப்படும் நிலையில் உள்ளது

நவம்பர் 29ஆம் தேதி இந்த திருமணம் நடக்கவிருந்த நிலையில் தற்போது மூன்றரை கோடி மதிப்புள்ள பங்களாவை திருமணத்திற்கு முன்னரே மாப்பிள்ளையின் அம்மா பெயரில் எழுதிக் கொடுத்தால் மட்டுமே திருமணம் என மாப்பிள்ளை வீட்டார் கட்டாயப்படுத்தவும் திருமணத்திற்கு பின்னர் பங்களாவை கொடுக்கிறோம் என்று மணமகள் வீட்டார் கூறியதற்கு மாப்பிள்ளை வீட்டார் சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது

மேலும் ஏற்கனவே 50 லட்சம் ரூபாய் வரதட்சணை முன்பணம் கொடுத்து விட்டதாகவும், கார் வாங்குவதற்கும் அட்வான்ஸ் கொடுத்து விட்டதாகவும் மணமகள் வீட்டார் கூறியுள்ள நிலையில் தற்போது திடீரென திருமணம் நிறுத்தப்படும் சூழ்நிலையில் இருப்பதால் தாங்கள் கொடுத்த வரதட்சணை பணத்தை திருப்பி வாங்கி தரும்படி போலீசில் மணமகள் தரப்பினர் புகார் அளித்துள்ளனர்.

தற்போது இதுகுறித்து இருதரப்பிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின்னர் வழக்குப்பதிவு செய்யப்படும் என தெரிகிறது

இந்த நிலையில் மணமகன் வீட்டார் இதுகுறித்து கூறியபோது ‘மணமகள் வீட்டார்கள் அவசரப்பட்டு புகார் கொடுத்துள்ளதாகவும் இருவீட்டாரின் பெரியவர்களை வைத்து இந்த பிரச்சனை பேசி தீர்க்கப்பட்டு, நல்லபடியாக திருமணம் நடைபெறும் என்றும் கூறி என்று கூறியுள்ளனர்

Leave a Reply