இன்று அபாரமாக விளையாடி சதமடித்த ஷிகர் தவானுக்கு சிஎஸ்கே அணி 4 கேட்சுகளை மிஸ் செய்தது. அதேபோல் 20வது ஓவரை ஒரு ஸ்பின் பவுலருக்கு கொடுத்து தவறு செய்தது

இந்த இரண்டு இமாலய தவறு காரணமாக சென்னை அணி இன்று 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது

20வது ஓவரை வீசும் அளவிற்கு பிராவோ உடல்தகுதி இல்லாததால் ஜடேஜா அல்லது கரண்சர்மா ஆகிய இருவரை மட்டுமே தேர்வு செய்ய வேண்டிய நிலை தனக்கு இருந்ததாகவும், தான் ஜடேஜாவை தேர்வு செய்ததாகவும் தோனி கூறியுள்ளார்.

இருப்பினும் ஒரு ஓவரில் 21 ரன்கள் தேவை என்ற நிலையில் ஐந்தே பந்துகளில் 22 ரன்கள் எடுத்து வெற்றி பெற்ற டெல்லி அணிக்கு வாழ்த்து தெரிவித்தே ஆக வேண்டும்

Leave a Reply