இந்தியா இலங்கை 3வது டி20 போட்டி: தொடரை வெல்பவர் யார்?

இந்தியா இலங்கை 3வது டி20 போட்டி: தொடரை வெல்பவர் யார்?

இந்தியா மற்றும் இலங்கை இடையே தற்போது டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும் 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கையும் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இந்தியா இலங்கை இடையே மூன்றாவது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டி இன்று இரவு குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் வெல்லும் அணி தொடரை வெல்லும் அணி என்பதால் இரு அணிகளும் இந்த போட்டியை வெல்ல தீவிரமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது