ஆனந்த் (இந்தியா), கார்ல்சன் (நார்வே) மோதும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி (12 சுற்று) சென்னையில் நடந்து வருகிறது. தேனாம்பேட்டையில் உள்ள ஹயாத் நட்சத்திர ஓட்டலில் நடக்கும் இந்த தொடரின் முதல் 2 சுற்று ஆட்டங்களும் டிராவில் முடிந்த நிலையில், நேற்று இரு வீரர்களும் 3வது சுற்றில் மோதினர்.

இரு வீரர்களுமே மிகுந்த கவனத்துடன் தற்காப்பாக விளையாடினர். ஒவ்வொரு நகர்த்துதலையும் நீண்ட யோசனைக்குப் பிறகே முடிவு செய்தனர். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி, 51 நகர்த்துதல்களின் முடிவில் யாருக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது. இந்த ஆட்டம் 4 மணி 22 நிமிடத்துக்கு நீடித்தது குறிப்பிடத்தக்கது. மூன்று சுற்று ஆட்டத்தின் முடிவில் இருவரும் தலா 1.5 புள்ளி பெற்று சமநிலையில் உள்ளனர். இந்த நிலையில், 4வது சுற்று ஆட்டம் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு தொடங்குகிறது.

Leave a Reply