தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 போட்டியிலும் மோசமான தோல்வியை சந்தித்த இந்திய அணி தொடரை இழந்துவிட்டது. இந்நிலையில், 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி செஞ்சுரியனில் பகலிரவு ஆட்டமாக நேற்று நடந்தது.

டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணி பேட்டிங் செய்தது. ஆரம்பத்தில் இந்திய பந்துவீச்சாளர் அமர்க்களமாக செயல்பட்டனர்.
தென் ஆப்ரிக்க அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 301 ரன்களை குவித்தது.

அடுத்து 302 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. சிறிது நேரத்தில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. சில ஓவர்கள் வீசப்பட்ட போது மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஏற்கனவே 2-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா தொடரை கைப்பற்றியது. இந்நிலையில்  கடைசி ஆட்டம் மழையால் ரத்தானது. இதனை அடுத்து இரு அணிகளுக்கு இடையான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 18 ம் தேதி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறுகிறது. கடைசி மற்றும் இரண்டாவது டெஸ்ட் போட்டி டர்பனில் 26 ம் தேதி தொடங்குகிறது.

Leave a Reply