சென்னையில் இன்று ஒரே நாளில் 3,759 பேர்களுக்கு கொரோனா: லாக்டவுன் போடுங்க!

corona virus ab

சென்னையில் இன்று ஒரே நாளில் 3,759 வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து சென்னையில் மட்டும் முழு ஊரடங்கு உத்தரவு போடுங்கள் என பலர் பரிந்துரை செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தமிழகத்தில் இன்று சுமார் 7 ஆயிரம் பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து அதில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு சென்னையில் மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சென்னையில் மட்டும் ஞாயிறு ஒரு நாள் முழு ஊரடங்கு போதாது என்றும் அனைத்து நாட்களிலும் முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு வருகின்றனர்.