shadow

 9பாராளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்ற 37 எம்.பிக்களும் நேற்று முதல்வர் ஜெயலலிதாவை சென்னையில் சந்தித்தனர்.

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட அதிமுக, 37 இடங்களில் அபார வெற்றி சாதனை படைத்துள்ளது.

கன்னியாகுமரி, தர்மபுரி மற்றும் புதுச்சேரி தவிர மற்ற மற்ற 37 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்கள் அதிமுகவுக்கு பெருமை பெற்று கொடுத்துள்ளனர். இதன் மூலம் பாராளும்ன்றத்தில் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு அடுத்து மூன்றாவது தனிப் பெரும் கட்சியாக அதிமுக உருவெடுத்துள்ளது. தேசிய அளவில் அனைவரது பார்வையும் அதிமுக மீது திரும்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை அதிமுகவின் புதிய எம்.பி.க்கள் அனைவரும் முதல்வர் ஜெயலலிதாவை சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து ஆசி பெற்றனர். அவர்கள் அனைவரும் முதல்வருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.  

ஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் வி.என்.பி. வெங்கட்ராமனும் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து ஆசி பெற்றார்.

இவ்வாறு அதிமுக வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

9

Leave a Reply