shadow

train accidentஉத்தரப் பிரதேச மாநித்தில் உள்ள ரேபரேலி என்ற மாவட்டத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று நேற்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில், 38 பேர் பரிதாபமாகபலியாகியுள்ளனர். மேலும் இந்த விபத்தில் 150 பேர் படுகாயத்துடன் அருகிலுள்ளமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

இந்த விபத்து சம்பவம் குறித்து ரயில்வே துறை மூத்த அதிகாரிகள் தெரிவித்ததாவது:

உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் இருந்து, உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசிக்கு ஜனதா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று சென்று கொண்டிருந்தது. ரேபரேலி மாவட்டத்தில் உள்ள பச்ரவண் ரயில் நிலையம் அருகே இந்த ரயில் காலை 9.30 மணியளவில் திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. ரயிலின் என்ஜினும், அதனுடன் இணைக்கப்பட்டிருந்த 2 பெட்டிகளும் தடம் புரண்டதால் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த 38 பயணிகள் உடல் நசுங்கி பலியாகினர். மேலும் 150 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு, ரேபரேலி மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த ஒருசிலர் இன்னும் அபாய கட்டத்தை தாண்டவில்லை என்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

விபத்துக்கு என்ன காரணம் என்பது இதுவரை உறுதியாகத் தெரிவிக்கப்படவில்லை. இதுதொடர்பாக விபத்தை நேரில் பார்வையிட்ட அதிகாரி ஒருவர் கூறும்போது, “பிரேக்’ கோளாறால் இந்த விபத்து நேரிட்டிருக்க வாய்ப்பிருப்பதாக கூறினார்.

விபத்து பற்றிய தகவலின்பேரில், லக்னௌ, ரேபரேலி ஆகிய இடங்களில் இருந்து மீட்புக் குழுவினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மீட்புப் பணியில் கிரேன் இயந்திரங்களும் ஈடுபடுத்தப்பட்டன.

விபத்து நடைபெற்ற பகுதிக்கு மருத்துவர்கள், உதவியாளர்கள் அடங்கிய 24 குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக லக்னௌ பிராந்திய தலைமை மருத்துவ அதிகாரி மருத்துவர் எஸ்.என்.எஸ்.யாதவ் தெரிவித்துள்ளார். லக்னௌ மருத்துவமனையில் முன்னெச்சரிக்கையாக 150 படுக்கைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

Leave a Reply