34 வருடங்களாக பயணிகளுக்கு செடிகள் தரும் கோவை கண்டக்டர்!

34 வருடங்களாக கோவையைச் சேர்ந்த கண்டக்டர் ஒருவர் தன்னுடைய பேருந்தில் ஏறும் பயணிகளுக்கு செடிகளை கொடுத்து வருகிறார் என்று ஆச்சரிய செய்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது

கோவையைச் சேர்ந்த கண்டக்டர் மாரிமுத்து யோகநாதன். இவர் தான் பணிபுரியும் பேருந்தில் ஏறும் பயணிகளுக்கு அனைவருக்கும் செடிகளை கொடுத்து அவரவர் வீட்டில் நட்டு வைக்கும்படி கோரிக்கை விடுக்கிறார்

இதை 34 வருடங்களாக செய்து வருவதாகவும் தன்னுடைய சம்பளத்தில் இருந்து 40% இதற்காகவே ஒதுக்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தன்னுடைய இந்த செயலுக்கு தன்னுடைய குடும்பத்தினரும் ஆதரவு அளிக்கிறார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்

கோவை முழுவதும் பசுமையாக காட்சி அளிக்க வேண்டும் என்பதே எனது ஒரே எண்ணம் என்றும் அவர் தெரிவித்துள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

Leave a Reply

Your email address will not be published.