333 துணை விவசாய அதிகாரி பணியிடங்களுக்கான தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
துணை விவசாய அதிகாரி பணியிடத் தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 7.4.2017 ஆகும்
காலியிடங்கள்: 33 ஊதியம்: ரூ. 5,200-20,200/- (பிபி2) + 2,800/- கிரேட் ஊதியம் வயது வரம்பு: 01/07/2017 அன்று 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.சி.(ஏ)., எஸ்.டி., எம்.பி.சி./டி.சி., பி.சி., பி.சி.எம். மற்றும் டிடபுள்யூகளுக்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை. கல்வித் தகுதி 1. பிளஸ் டூ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2. விவசாயத்தில் இரண்டு ஆண்டுகள் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். கட்டணம் பதிவு கட்டணம்: ரூ. 150 தேர்வு கட்டணம்: ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்பிக்கும்போது ரூ.150 தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும். தேர்வு முறை: எழுத்து மற்றும் வாய்மொழி தேர்வு. தேர்வு ஜூலை 2ம் தேதி நடக்கும். இது குறித்து மேலும் அறிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்- https://goo.gl/GaFq3y