இலங்கை சிறையில் விடுதலையான 33 தமிழக மீனவர்கள் ராமேஸ்வரம் வருகை.

Indian_Fishermen_released_by_Lanka_360_PTI_5June14நரேந்திரமோடி பதவியேற்று இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்ட 33 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்ய இலங்கை அதிபர் ராஜபக்சே விடுதலை செய்யப்பட்டதை அடுத்து நேற்று 33 தமிழக மீனவர்களும் இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். ராஜ்கமல் என்ற இந்திய கப்பல்படைக்கு சொந்தமான கப்பலில் விடுதலை செய்யப்பட்ட 33 மீனவர்களூம் நேற்று ராமேஸ்வரம் வந்து சேர்ந்தனர்.

இந்த தகவலை இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் சயீது அக்பரூதின் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார். விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் ராமேஸ்வரம் வந்து சேர்ந்ததை அறிந்த உறவினர்கள் அவர்களை உற்சாகமாக வரவேற்றனர்.

இந்திய மற்றும் இலங்கை அதிகார்களின் மட்டத்தில் இம்மாதம் இருதரப்பு மீனவர்கள் எல்லை மீறுதல் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தப்படும் என வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

Leave a Reply