shadow

ரூபாய் நோட்டு பிரச்சனையால் 32 நாள் குழந்தையை பறிகொடுத்த தாய்

1மத்திய அரசின் ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் பொதுமக்கள் இன்னல்களை அனுபவித்து வருகின்றனரே தவிர எதிர்பார்த்த கருப்புப்பணமோ அல்லது கள்ளப்பணமோ வெளிவரவில்லை. அதற்கு நேர்மாறாக பொதுமக்களின் விலை மதிப்பில்லா உயிர்கள்தான் ஆபத்தில் உள்ளன. இதுவரை கிட்டத்தட்ட 70க்கும் மேற்பட்டோர் இதனால் உயிரிழந்துள்ளனர்,

இந்நிலையில் வங்கி வாசலில் வரிசையில் நின்ற பெண் ஒருவரின் தோளில் வைத்திருந்த 32 நாள் குழந்தை ஒன்று நேற்று மரணம் அடைந்துள்ளது.

பீகாரில் வங்கியில் பணம் எடுப்பதற்காக நின்ற ஒரு பெண் கையில் பிறந்து 32 நாளே ஆன குழந்தை இருந்தது. சுமார் ஒன்றரை மணிநேரம் குழந்தையுடன் வரிசையில் நின்று பணம் எடுத்த பின்னர் குழந்தையை பார்த்தபோது அந்த குழந்தை இறந்ததை கண்டு அந்த தாய் அதிர்ச்சி அடைந்தார்.

கருப்புப்பணத்தை ஒழிக்க வேண்டும் என்று கொண்டு வந்த ரூபாய் நோட்டு அறிவிப்பால் இன்னும் எத்தனை உயிர் போகப்போகின்றதோ அந்த கடவுளுக்குத்தான் வெளிச்சம். இதற்கு முடிவு கட்ட உடனடியாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Leave a Reply