32 மாணவர்களுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி ஒன்றில் 32 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் கல்லூரி இழுத்து மூடப்பட்டுள்ளது

கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் என்ற பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வரும் 32 மாணவர்களுக்கு கொரனோ வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

எனவே அந்த கல்லூரி இழுத்து மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது. மேலும் அந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 32 மாணவர்களும் சமீபத்தில் கேரளாவுக்கு சென்று திரும்பியதாக தகவல் வெளிவந்துள்ளது