30 நாட்களில் ஓய்வு பெறவிருந்த டாக்டர்

கொரோனாவால் மரணம்

இம்மாதம் 30ஆம் தேதி ஓய்வு பெற இருந்த டாக்டர் ஒருவர் கொரோனாவால் திடீரென மரணம் அடைந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள லோக் நாயக் என்ற மருத்துவமனையில் பணிபுரிந்த 59 வயது டாக்டர் ஒருவர் கடந்த மே 12ஆம் தேதி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதால் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று மரணமடைந்தார் ஓய்வு பெற இன்னும் 30 நாட்களே இருக்கும் நிலையில் அவர் மரணமடைந்தது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கொரோனாவால் மறைந்த இந்த டாக்டர் கடந்த மாதம் வரை பணியில் இருந்த போது ஏராளமான கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் உயிரை காப்பாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply