30 ஆயிரத்தை எட்டியது தங்கம்: புதிய உச்சம்

30 ஆயிரத்தை எட்டியது தங்கம்: புதிய உச்சம்

ஒரு சவரன் தங்கம் வரலாற்றில் புதிய உச்சமாக ரூ.30 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி வருவதால் தங்கம் வாங்குபவர்கள் கவலையும், தங்கத்தை சேமித்து வைத்திருப்பவர்கள் மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.

பங்குச்சந்தை வீழ்ச்சி, பொருளாதார மந்தநிலை, உலக நாடுகளின் பொருளாதாரம், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆகியவை காரணமாக தங்கம் விலை கடந்த சில வாரங்களாக உயர்ந்து கொண்டே வந்தது

இந்த நிலையில் இவ்வருடம் டிசம்பருக்குள் தங்கம் விலை சவரன் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்ப்புக்கு முன்னரே செப்டம்பர் மாதமே தங்கம் விலை ரூ.30 ஆயிரத்தை தாண்டிவிட்டது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 288 உயர்ந்து ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ 3,765-க்கும் ஒரு சவரன் ரூ 30,120-க்கும் விற்பனையாகி வருகிறது

Leave a Reply