30ஆம் தேதி குண்டு வெடிக்கும்: சென்னை ஐகோர்ட்டுக்கு வந்த மிரட்டல் கடிதம்

30ஆம் தேதி குண்டு வெடிக்கும்: சென்னை ஐகோர்ட்டுக்கு வந்த மிரட்டல் கடிதம்

செப்டம்பர் 30ஆம் தேதி சென்னை ஐகோர்ட்டில் வெடிகுண்டு வெடிக்கும்’ என ஐகோர்ட் பதிவாளருக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது.

இந்த கடிதத்தை சென்னை ஐகோர்ட் பதிவாளர் சென்னை காவல்துறைக்கும் மத்திய பாதுகாப்புப்படை தலைமை பதிவாளருக்கும் அனுப்பியுள்ளார். இதனையடுத்து இந்த கடிதம் குறித்த விசாரணை தொடங்கிவிட்டது.

டெல்லி காலிஸ்தான் ஆதரவு குழுவைச் சேர்ந்த ஹதர்ஷன் சிங் நாக்பால் என்பவர் இந்த கடிதத்தை எழுதியுள்ளதால் டெல்லி போலீசாரிடம் சென்னை போலீசார் ஆலோசனை செய்து வருகின்றனர். முதல்கட்டமாக இந்த கடிதம் அனுப்பப்பட்ட முகவரியை டெல்லி போலீசார் சோதனை செய்துவிட்டு பின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது

Leave a Reply