shadow

திமுக கூட்டணியில் மக்கள் தேமுதிகவுக்கு எத்தனை தொகுதி?
makkal dmdk
திமுக கூட்டணியில் தேமுதிக இணையாததால் அதிருப்திக்குள்ளான சந்திரகுமார் கோஷ்டியினர் நேற்று முன் தினம் மக்கள் தேமுதிக என்ற பெயரில் புதிய இயக்கத்தை தோற்றுவித்தனர். இந்நிலையில் நேற்று மாலை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்த சந்திரகுமார், திமுகவுக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி ஆதரவு கொடுப்பதாக கூறினார்.,

இந்நிலையில் மக்கள் தேமுதிகவுக்கு திமுக கூட்டணியில் 3 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என திமுக வட்டாரங்கள் கூறுகின்றன. மக்கள் தேமுதிகவில் சந்திரகுமார் உள்பட 15 தேமுதிக நிர்வாகிகள் உள்ளனர். ஆனால் திமுக கொடுக்க ஒப்புக்கொண்டதோ மூன்றே மூன்று தொகுதிகள் என்பதால் அந்த கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் சந்திரகுமார் கூறியபோது, “உங்களை நம்பி வந்துள்ளோம் என்று கருணாநிதியிடம் கூறினோம். அதற்கு கடைசி நேரத்தில் வந்துள்ளீர்களே என அவர் கூறினார். நாங்கள் சில தொகுதிகளை கேட்டுள்ளோம். அவர்கள் எத்தனை தொகுதிகள் கொடுத்தாலும் ஏற்றுக்கொள்வோம்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply