கொரோனாவால் 3 மில்லியன் நபர்கள் பெற்ற பயன்கள்:

ஆச்சரிய தகவல்

உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி மனித உயிர்களை பலி வாங்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸால் ஒரு சில நன்மைகளும் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

பிரிட்டனில் சமீபத்தில் எடுத்த கணக்கெடுப்பு ஒன்றில் கடந்த இரண்டு மாதங்களில் அதாவது கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து 3 மில்லியன் நபர்கள் புகையிலைப் பழக்கத்திலிருந்து விடுபட்டு உள்ளதாக தெரிவித்துள்ளனர்

இவர்களில் ஆயிரம் பேருக்கு மேல் செயின் ஸ்மோக்கர்களாக இருந்தார்கள் என்றும், புகையிலை பழக்கத்தை விடமுடியாமல் இருந்ததாகவும், ஆனால் அவர்கள் தற்போது புகையிலையை சுத்தமாக மறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது

புகையிலையை மறக்க எத்தனையோ வழிகளை முயற்சித்தும் தங்களால் முடியாத நிலையில் இந்த லாக்டோன் தங்களை புகையிலையில் இருந்து காப்பாற்றி விட்டதாக அவர்கள் கூறியுள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

Leave a Reply