சென்னை நீலாங்கரையில் பூட்டியிருந்த டாக்டர் வீட்டை உடைத்து இளம்பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
உல்லாச அவசரத்தில் படுக்கையறைக் கதவின் தன்மையை புரிந்து கொள்ளவில்லை அவர்கள். தானியங்கி படுக்கையறைக் கதவை திறக்க முடியாமல் அகப்பட்டுக் கொண்டனர். நீலாங்கரையில் வசிக்கும் டாக்டர் அப்துல்லா குடும்பத்துடன் சுற்றுலா சென்று விட்டு நேற்று இரவு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கண்ணாடி ஜன்னல் உடைந்திருந்ததைப் பார்த்து அதிர்ந்தார். உடனே கதவைத் திறந்து வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது முன் அறையில் துணிமணிகள் அலங்கோலமாகக் கிடந்தன. பிரியாணி பொட்டலங்களும் இருந்தன.படுக்கையறைக்குச் சென்றார். அறை உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. அறையின் உள்ளே ஆட்கள் பேசும் சப்தம் கேட்டது. உடனே பீதியடைந்த டாக்டர் நீலாங்கரை போலீஸ் உதவியை நாடினார். வீட்டிற்கு வந்த போலீஸ் படை டாக்டரிடமிருந்து சாவியை வாங்கி படுக்கையறைக் கதவைத் திறந்தனர். அங்கு ஒரு இளம் பெண் 3 வாலிபர்கள் இருந்ததைப்பாத்து அதிர்ச்சியடைந்தனர். 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அந்தப் பெண் கொட்டிவாக்கத்தை சேர்ந்த 18 வயது இளம் பெண் என்று தெரியவந்தது.
விசாரணையில் அவர்கள் போலீசிடம் தெரிவித்ததாவது:
கிழக்குக் கடற்கரைச் சாலையில் பூட்டிக் கிடக்கும் வீடுகளை மற்றும் பண்ணை வீடுகளை நோட்டமிடுவோம். பூட்டியிருக்கும் வீட்டைக் கள்ளச்சாவி கொண்டு திறந்து அங்கு இருக்கும் பொருட்களைக் கொண்டு சமைத்துச் சாப்பிடுவோம். பிறகு அங்கே உல்லாசமாக இருப்போம். சில சமயம் பணத்தையும் எடுத்து ஜாலியாக இருப்போம். நகைகளைக் கொள்ளை அடிக்க மாட்டோம். அப்படித்தான் இங்கும் வந்தோம் ஆனால் தானியங்கி கதவு பூட்டிக்கொண்டதால் அகப்பட்டுக் கொண்டோம் என்று அவர்கள் கூறினார்கள்.
Leave a Reply
You must be logged in to post a comment.