3 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்

3 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்

அரசு மற்றும் தனியார் வங்கி ஊழியர்கள் சங்கங்கள் இன்று ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதால் இன்று பெரும்பாலான வங்கிகள் சேவை முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

3 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் 85 ஆயிரம் வங்கி கிளைகளை சேர்ந்த 10 லட்சம் ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். இந்த வேலைநிறுத்தத்தில் பெரும்பாலான வங்கி ஊழியர்கள் சங்கம் பங்கேற்றுள்ளதால் நாடு முழுவதும் இன்று வங்கி சேவை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே 4வது சனிக்கிழமை, ஞாயிறு, மற்றும் செவ்வாய் ஆகிய தொடர் விடுமுறை வங்கிகளுக்கு இருந்த நிலையில் இன்றும் வங்கிகள் சேவை முடக்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் பெரும் அவதியில் உள்ளனர்

 

Leave a Reply