3 மாதங்களுக்கு கோதுமை, அரிசி இலவசம்: ரூ.1000 வழங்கவும் முடிவு!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காரணத்தினால் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மாநில அரசு சில அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது

அதன்படி உத்தரப்பிரதேச மாநிலத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பொதுமக்களுக்கு மூன்று மாதங்களுக்கு மூன்று கிலோ இலவச கோதுமை மற்றும் 2 கிலோ அரிசி வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.

மேலும் தினக்கூலி தொழிலாளர்கள், ரிக்‌ஷா ஓட்டுநர்கள், சாலையோர கடை வைத்திருப்பவர்களுக்கு ரூ.1000 வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.