3 எம்எல்ஏக்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்: பதவி பறிபோகுமா?

அதிமுக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோர் அமமுக கட்சியில் பொறுப்பில் இருப்பதாக அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயகரிடம் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் 3 எம்எல்ஏக்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதனையடுத்து 3 எம்.எல்.ஏக்களின் பதவி பறிபோகும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக தமிழக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. 18 தொகுதிகளின் எம்.எல்.ஏக்கள் பதவி நீக்கப்பட்டு அந்த தொகுதிகளுக்கு தற்போதுதான் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அந்த தேர்தலின் முடிவு வெளிவருவதற்குள் மீண்டும் 3 எம்.எல்.ஏக்களுக்கு ஆபத்து என்ற நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply