shadow

3வது முறையாக டிரெண்ட் ஆகும் ‘கோபேக்மோடி’

பிரதமர் நரேந்திரமோடி இதுவரை தமிழகம் வந்த இரண்டு முறையும் ‘கோபேக்மோடி’ என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்ட் ஆன நிலையில் இன்று திருப்பூர் வரவுள்ள நிலையில் இன்றும் அதே ‘கோபேக்மோடி’ ஹேஷ்டேக்  டிரெண்டாகி உள்ளது.

தமிழகத்தில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் பாஜகவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதிமுக உள்பட அனைத்து கட்சிகளும் பாஜகவை கூட்டணியில் இணைத்து கொள்ள தயங்குகின்றன.

இந்த நிலையில் தற்போது மூன்றாவது முறையாக டிவிட்டரில் ‘கோபேக்மோடி’ ஹேஷ்டேக் மீண்டும் பெரிய அளவில் டிரெண்டாகிறது. தற்போது தேசிய அளவில் இந்த டேக் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இதில் டிவிட்டுகள் போடப்பட்டு வருவதால் தேசிய அளவில் இது மீண்டும் முதலிடம் பிடிக்க வாய்ப்பு இருக்கிறது. 

Leave a Reply