இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையே டர்பன் நகரில் நடந்துவரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தில் இந்திய அணிக்கு தென்னாப்பிரிக்க சரியான பதிலடி கொடுத்து வருகிறது.

இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் வெளிச்சமின்மை காரணமாக முன்னதாகவே முடிக்கப்பட்ட நிலையில் நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடர்ந்தது. சதம் அடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முரளி விஜய், ஸ்டெயின் பந்துவிச்சில் 97 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய விராத் கோஹ்லி  46 ரன்களும், புஜாரே 70 ரன்களும், ரஹானே ஆட்டமிழக்காமல் எடுத்த 51 ரன்களும் கைகொடுக்க இந்திய அணி 334 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

பின்னர் முதல் இன்னிங்ஸில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி, ஆரம்பம் முதலே தங்களது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தனர். தொடக்க ஆட்டக்காரர்களான ஸ்மித் மற்றும் பீட்டர்சன் வெகு சிறப்பாக விளையாடியதால் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 82 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்மித் 35 ரன்களும், பிட்டர்சன் 46 ரன்களும் எடுத்துள்ளனர்.

முதல் இன்னிங்ஸில் 252 ரன்கள் பின்தங்கியுள்ள தென்னாப்பிரிக்க அணி, இன்னும் தன் கைவசம் 10 விக்கெட்டுக்களையும் வைத்துள்ளதால் இன்றைய ஆட்டம் முக்கியத்துவமாக கருதப்படுகிறது.

Leave a Reply