நேற்றைய போட்டியில் சென்னை அணியின் டூபிளஸ்சிஸ் விக்கெட்டை வீழ்த்திய ரபடா, ஐபிஎல் தொடரில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையை செய்தார்

இவர் 27 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். ஐபிஎல் தொடரில் 30க்கும் குறைவான போட்டிகளில் 50 விக்கெட்டுக்களை வீழ்த்திய ஒரே வீரர் இவர்தான்

முன்னதாக கொல்கத்தா அணியின் சுனில் நரைன் 32 போட்டிகளிலும், மும்பை அணியின் மலிங்கா 33 போட்டிகளிலும் சென்னை அணியின் இம்ரான் தாஹிர் 35 போட்டிகளிலும் மிட்செல் மெக்லனஹன் 36 போட்டிகளிலும் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply