shadow

திருவண்ணாமலை: இன்று மாலை 2,668 அடியில் மகா தீபம் ஏற்றம். பக்தர்கள் குவிந்தனர்.

thiruvannamalaiதிருக்கார்த்திகை எனப்படும் கார்த்திகை தீப திருவிழா இன்று திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் நடைபெறுகிறது. இன்று அதிகாலை 4 மணிக்கு பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கோபரணி தீபம் ஏற்றப்பட்டது. இதை தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு கோயில் தங்கக் கொடிமரம் எதிரேயுள்ள சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரராகக் காட்சியளிக்க, 2,668 அடி உயரமுள்ள திருவண்ணாமலை மலை மீது மகா தீபம் ஏற்றப்படவுள்ளது.

இந்த அற்புத காட்சியை நேரில் பார்க்க தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர். தெற்கு ரயில்வே இந்த திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான அக்னித்தலமான திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் ஒருபகுதியாக கடந்த நவம்பர் 21ம் தேதி வெள்ளித் தேரோட்டமும், 22-ம் தேதி கொட்டும் மழையில் பெரிய தேரோட்டத்துடன் பஞ்ச ரதங்களின் தேரோட்டமும் நடைபெற்றன.

English Summary: 2,668 feet mahadeepam in Tiruvannamalai today

Leave a Reply