மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு

இன்று முதலிடம் பெற்ற கோவை

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 77 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இன்று மட்டும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்றும் சற்றுமுன் தலைமைச்செயலாளர் கூறிய நிலையில் மாவட்டவாரியாக கொரோனா தொற்று பரவியவர்கள் குறித்த விபரங்களை தற்போது பார்போம்

இன்று அதிகபட்சமாக கோவையில் 26 பேர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோவையை அடுத்து செங்கல்பட்டில் 12 பேர்களும், சென்னை மற்றும் ராணிப்பேட்டையில் 9 பேர்களும், திண்டுக்கல்லில் 8 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று மட்டும் கோவையில் அதிக பாதிப்பு என்றாலும் மொத்தத்தில் சென்னையில் 172 கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply