கடும் குளிர்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரே நாளில் 25 பேர் பலி.

கடும் குளிர்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரே நாளில் 25 பேர் பலி.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் ஏற்பட்டு வருவதை அடுத்து ஒரு சிலர் இறந்து வருகின்றனர் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் கடும் குளிர் காரணமாக கான்பூர் என்ற பகுதியில் மட்டும் 25 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 17 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடும் குளிர் காரணமாக ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளதாகவும் ரத்தம் உறைவதால் ஏற்படும் மாரடைப்பு மூளை பாதிப்பு ஆகியவை காரணமாக உயிர் இழப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.