25 வருட சினிமா வாழ்வின் புதிர் இதுதான்: பிரபல இயக்குனர்

25 வருட சினிமா வாழ்வின் புதிர் இதுதான்: பிரபல இயக்குனர்

தமிழ் சினிமாவில் மோசமான, ஆபாசமான படங்கள் வரும்போது பலர் பொங்கி எழுவதுண்டு. அந்த சினிமாவுக்கு எதிராக கட்டுரைகள், விமர்சனங்கள், ஏன் போராட்டம் கூட நடைபெறுவதுண்டு. ஆனால் அதே சமயம் சமூகத்தை சீர்திருத்தும் நல்ல சினிமாக்கள் வரும்போது இதே பொங்கியவர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதாக பிரபல இயக்குனர் ஒருவர் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அந்த இயக்குனர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘கலாச்சார சீரழிவை நோக்கி திசை திருப்பும் சினிமாக்கள் வரும் போது எழும் சமகாலகலைஞர்களின் கண்டண குரல் நல்ல சினிமாக்கள் வரும் போது மனம் திறந்து வாழ்த்தாமல் மவுனமாக இருத்தல் ஏன் என்று தான் என் 25 வருட சினிமா வாழ்வின் புதிர்’ என்று பதிவு செய்துள்ளார்.

மேலும் இந்த டுவீட்டை பதிவு செய்த ஒருசில நிமிடங்களில் அவர் இந்த டுவீட்டை நீக்கிவிட்டது ஏன் என்பது புரியாத புதிராக உள்ளது

Leave a Reply

Your email address will not be published.